டுவிட்டர் அறிமுகம் செய்யும் அட்டகாசமான புத்தம் புதிய வசதி

Report Print Kavitha in ஆப்ஸ்

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி ஆடியோ வடிவில் டுவீட்களை போஸ்ட் செய்யும் வசதியை பயனர்கள் தற்போது பெற முடியும்.

இதற்கு முன்னர் வீடியோ, படங்கள் மற்றும் எழுத்துவடிவிலேயே டுவீட்கள் போஸ்ட் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே இப் புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஆப்பிளின் iOS சாதனங்களில் மாத்திரமே இவ் வசதி கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

அன்ரோயிட் சாதனங்கள் தொடர்பாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.

எனினும் அச் சாதனங்களிலும் விரைவில் இவ் வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்