Zoom அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கடந்த 3 மாத காலத்திற்குள் மிகவும் பிரபல்யமான அப்பிளிக்கேஷனாக Zoom விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதற்கு காரணம் ஸ்கைப், மைக்ரோசொப்ட் டீம் போன்ற அப்பிளிக்கேஷன்களை விடவும் மேலதிக சிறப்பம்சங்கள் சிலவற்றினைக் கொண்டிருந்தமையாகும்.

எனினும் இதில் மிகப் பெரிய குறைபாடாக பாதுகாப்பு காணப்பட்டது.

இப்படியிருக்கையில் சிறிது சிறிதாக குறித்த குறைபாடுகளை அந்நிறுவனம் நிவர்த்தி செய்து வருகின்றது.

இதில் end to end encryption வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ் வசதியானது முன்னர் கட்டணம் செலுத்தி சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் தற்போது அனைத்து வகையான Zoom பயனர்களுக்கும் இவ் வசதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்