பேஸ்புக்கின் Portal வீடியோ அழைப்பு சேவையில் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Portal Video Call வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

இதற்காக விசேட சாதனங்களையும் அறிமுகம் செய்திருந்தது.

ஆரம்பத்தில் பெரிதும் பிரபல்யமடைந்திராத வசதியானது தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து ஒரு நேரத்தில் 50 பேர் வரை வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை தற்போது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

இதேவேளை ஏற்கணவே Messenger Room ஊடாக வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய உச்சபட்ச பயனர்களின் எண்ணிக்கையை 50 ஆக பேஸ்புக் மாற்றியிருந்தது.

எவ்வாறெனினும் Zoom அப்பிளிக்கேஷனில் சாதாரணமாக 100 பயனர்கள் வரை வீடியோ அழைப்பினை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் Portal வசதி தொடர்பில் அறிந்துகொள்ள https://portal.facebook.com/ எனும் இணைப்பிற்கு செல்லவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்