மொபைல் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Google One அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய அப்பிளிக்கேஷனை மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யவுள்ளது.

Google One எனும் குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது சேமிப்பகத்தினை முகாமை செய்தல் மற்றும் பேக்கப் செய்தல் போன்ற செயற்பாடுகளிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது படங்கள், வீடியோக்கள், தொலைபேசி இலக்கங்கள், கலன்டர்கள் உட்பட மேலும் பல தகவல்களை பேக்கப் செய்துகொள்ள முடியும்.

அத்துடன் இந்த அப்பிளிக்கேஷனில் இலவசமாக 15GB சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை iOS மற்றும் அன்ரோயிட் சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த வருடம் சில அன்ரோயிட் சாதனங்களில் இவ்வாறான வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அனைத்து வகையான மொபைல் சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதனால் பயனர்கள் தமது அவசியமான தகவல்களை தொலைக்காது பாதுகாப்பாக பேண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்