பேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
122Shares

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இணைய உலகினை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இந்நிலையில் எந்தவொரு புதிய சேவையினையும் இலகுவாக உலகெங்கிலும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

இப்படியிருக்கையில் அடுத்த மாதம் அளவில் தனது செய்திச் சேவையினை சில நாடுகளில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரேசில், பிரான்ஸ், மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கணவே இச் சேவையானது கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மற்றும் 200 வரையான செய்தி சேகரிப்பு நிலையங்கள் என்பவற்றினைக் கொண்டு இச் சேவையினை வழங்கி வருகின்றது.

மாதம் தோறும் சுமார் 2.7 பில்லியன் வரையான ஆக்டிவ் பயனர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் இச் சேவையானது பெரிதும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்