முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் Vacation Mode எனும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் குறித்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையிலேயே தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தாம் விடுமுறைகளில் உள்ள நேரங்களில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை பெறுவதை Mute செய்து வைத்திருக்க முடியும்.
பின்னர் Unmute செய்யும்போது கிடைக்கப்பெற்ற குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறான வசதியே Vacation Mode ஆகும்.
பயனர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காகவே இவ்வாறானதொரு வசதி அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.