சிறிய அளவிலான டப்பிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு மிகவும் பிரபல்யம் பெற்ற அப்பிளிக்கேஷனாக டிக் டாக் விளங்குகின்றது.
குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது பல இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றது.
குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது டிக் டாக்.
அதாவது குறித்த அப்பிளிக்கேஷனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கொடூரமான வீடியோக்களை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக தற்கொலை செய்தல் போன்றவற்றினை சித்தரிக்கும் வீடியோக்கள் இவ்வாறு நீக்கப்படவுள்ளன.
அதுமாத்திரமன்றி குறித்த வீடியோக்களை மீண்டும் மீண்டும் தரவேற்றம் செய்யும் கணக்குகளை தடை செய்யவும் தீர்மானித்துள்ளது.