வீடியோ அழைப்பு வசதியை விரைவில் அறிமுகம் செய்யும் LinkedIn

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
9Shares

தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பினை தேடக்கூடிய சமூகவலைத்தளமாக LinkedIn விளங்குகின்றது.

இதனை உலகெங்கிலிமிருந்து பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படியிருக்கையில் பயனர்கள் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை தனது தளத்தினுள்ளே வழங்கப்போவதாக LinkedIn தெரிவித்துள்ளது.

எனினும் இவ் வசதியினை வழங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Teams அப்பிளிக்கேஷன் அல்லது Verizon நிறுவனத்தின் BlueJeans அப்பிளிக்கேஷன் அல்லது Zoom அப்பிளிக்கேஷனை பயன்படுத்த நேரிடும்.

அதாவது LinkedIn வலைத்தளத்தினை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது வீடியோ அழைப்பு ஒன்றினை ஏற்படுத்த விரும்பின் மேற்கண்ட அப்பிளிக்கேஷன்களில் ஒன்றினுள் LinkedIn தளத்திலிருந்தவாறே லாக்கின் செய்ய வேண்டும்.

இவற்றினை விட புதிய சில ஈமோஜிக்கள், Bulk Delete வசதி என்பனவும் தரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்