10 வது பிறந்தநாளை ஒட்டி இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் புதிய வசதிகள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
81Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரபல புகைப்படங்களை பகிரும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இச் சேவையானது அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் 10வது பிறந்த நாளை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுடன் இணைந்து கொண்டாடவுள்ளது.

இதற்காக புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Classic Icon களை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு ஸ்மார்ட் கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை திறந்து லாக்கின் செய்யவும்.

அதன் பின்னர் Settings பகுதிக்கு செல்லவும். தொடர்ந்து அப் பக்கத்தினை கீழ் நோக்கி ஸ்கொரல் செய்யவும்.

அப்போது இன்ஸ்டாகிராம் பிறந்நாள் கொண்டாட்டத்திற்குரிய அனிமேஷனுடன் Celebrate with us என்ற பக்கம் தென்படும்.

அப் பகுதியில் பல ஐகான்கள் காண்பிக்கப்படும்.

அவற்றின் மேல் கிளிக் செய்து நீங்கள் விரும்பிய புதிய ஐகானை ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துக்கொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்