பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தாவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஒவ்வொருடைய கையிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் வந்த பின்னர் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேஸ்புக்கினை நாள்தோறும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பது தொடர்பாக அறியும் வசதி அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது.

இதனை அன்றாடம் பார்வையிட்டால் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவு செய்வதை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது எவ்வாறு குறித்த நேரத்தினை பார்வையிடுவது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் உள்ள Settings & Privacy எனும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

குறித்த மெனுவினை கிளிக் செய்யும்போது தோன்றும் உப மெனுவில் காணப்படும் Your time on Facebook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது கடந்த ஒரு வாரம் பேஸ்புக்கில் செலவு செய்த நேரத்தினை பார்வையிட முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்