பேஸ்புக் வலைத்தளத்திற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்டுள்ள சமூகவலைத்தளமாக டுவிட்டர் காணப்படுகின்றது.
இத் தளத்தில் பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள Like பொத்தானுக்கு பதிலாக Heartin பொத்தான் தரப்பட்டுள்ளது.
இது ஒரு டுவீட்டினை அல்லது ரீடுவிட்டினை விரும்புபவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்கு உதவுகின்றது.
எனினும் விரும்பாதவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்கான எந்தவொரு பொத்தானும் டுவிட்டரில் இல்லை.
எனவே இதற்காக downvotes அல்லது dislikes பொத்தானை அறிமுகம் செய்வது தொடர்பில் டுவிட்டர் கருத்தில் கொண்டுள்ளது.
சைபர் செக்கியூரிட்டின வல்லுனரான Jackie Singh என்பவரின் பரிந்துரைக்கு அமையவே இந்த விடயத்தை கருத்திற்கொள்வதாக டுவிட்டர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.