வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
40Shares

கடந்த வாரம் வாட்ஸ் ஆப்பில் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய வசதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி Mute Video எனும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியின் மூலம் வாட்ஸ் ஆப்பினூடாக வீடியோ ஒன்றினை பரிமாறும் முன்னர் அதனை Mute செய்து அனுப்ப முடியும்.

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி 2.20.207.2 எனும் பீட்டா பதிப்பில் இவ் வசதி உள்ளடக்கப்படும் என தெரிகின்றது.

இவ் வசதியை எடுத்துக்காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் வீடியோ ஒன்றினை ட்ரிம் செய்ய முடிவதுடன், எழுத்துக்கள், ஈமோஜிக்கள் போன்வற்றினை சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

அதேநேரம் பின்னணி ஒலியை இல்லாது செய்யவும் முடியும்.

இவ்வாறு பின்னணி ஒலியை இல்லாது செய்யும் வசதியே Mute Video ஆகும்.

இதேவேளை குறித்த வசதியானது முதலில் அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனிலேயே அறிமுகம் செய்யப்படும் எனவும் அதன் பின்னரே iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்