Guides வசதியினை விரிவாக்கம் செய்யும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கடந்த மே மாதம் Guides எனும் புதிய வசதியினை இன்ஸ்டாகிராம அறிமுகம் செய்திருந்தது.

இவ் வசதியினை இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு பயன்படுததக்கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது குறித்த வசதியினை விரிவாக்கம் செய்து மேலும் பல உள்ளடக்கங்களை வழங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

இவ் வசதியின் மூலம் பயனர்கள் தாம் விரும்பிய கிரியேட்டர்கள், பொது நபர்கள், நிறுவனங்கள் மற்றும் பப்ளிஸ்சர்கள் மூலம் உருவாக்கப்பட்ட பரிந்துரைகள், டிப்ஸ் மற்றும் ஏனைய உள்ளடக்கங்கள் என்பவற்றினை இலகுவாக தேடிப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இப்படியான நிலையில் கடந்த நொவெம்பர் 17 ஆம் திகதி முதல் Products, Place, மற்றும் Posts ஆகிய வகைகளையும் உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் எழுத்துக்கள், புகைப்படங்கள், கேலரிக்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் அடங்கும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்