புதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
81Shares

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனாக டிக்டாக் விளங்கியது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து டிக்டாக்கிற்கு பதிலாக இந்திய அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர்களால் சிங்காரி எனப்படும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது வரை சுமார் 38 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக நாள்தோறும் 96 மில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாகவும், கடந்த 45 நாட்களில் மாத்திரம் 2.6 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்