Account Verification வசதியை மீண்டும் கொண்டுவரும் டுவிட்டர்: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
33Shares

பிரபலமான ஒருவரின் பெயரில் அல்லது தனிநபரின் பெயரில் பல போலிக் கணக்குகள் உருவாக்கப்படுவது வழக்கமாக காணப்படுகின்றது.

எனினும் உரியவரின் கணக்கினை மற்றையவர்கள் முறையாக அடையாளம் கண்டுகொள்வதற்காக Account Verification வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்பவற்றில் காணப்படுகின்றது.

Account Verification செய்யப்பட்ட கணக்கில் நீல நிற சரி அடையாளம் காணப்படும்.

இவ் வசதியினை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக புதிய பயனர்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது.

எனினும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்