பேஸ்புக்கினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் பிரபல தளமான இன்ஸ்டாகிராமில் Live Rooms எனும் சட் வசதி காணப்படுகின்றமை தெரிந்ததே.
தற்போது இவ் வசதியில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி நான்கு நபர்கள் இவ் வசதியின் ஊடாக லைவ் சட் செய்ய முடியும்.
அதாவது ஹோஸ்ட் செய்யும் நபருடன் மேலும் 3 நபர்கள் இணைய முடியும்.
அதேவேளை இதற்கான நேர அளவும் 4 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம் மாற்றத்தினை இந்திய பயனர்கள் மாத்திரமே தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் இந்தோனேசியாவிலும் Live Rooms வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.