சமூகவலைத்தளங்கள் உட்பட ஏனைய இணைய வசதிகளைப் பயன்படுத்தும்போது அதற்கான கணக்குகளை பாதுகாப்பாக பேணுவதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.
அவற்றில் மின்னஞசல்களுக்கோ அல்லது கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாகவோ OTP அனுப்பப்படும் முறையும் உள்ளது.
சில சமயங்களில் ஒரே கணக்கினை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
எனினும் இதன்போது ஏனையவர்களும் ஒருவரது கணக்கினை ஹேக் செய்து பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இதனால் டுவிட்டர் நிறுவனம் Hardware Security Key எனும் வசதியை அறிமுகம் செய்கின்றது.
இதன்போது லொக்கின் செய்யப்படும் சாதனத்தினை அடையாளம் காண்பதற்கான கீ ஒன்று தரப்படும்.
இதனைப் பயன்படுத்தி லொக்கின் செய்ய முடியும்.
இதனால் SIM swap attack முறையில் கணக்கு திருடப்படுவதை தடுக்கலாம்.
இவ் வசதி அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.