ஆப்பிளின் ஐபோன் சாதனங்களில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்காக FaceTime எனும் அப்பிளிக்கேஷன் தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இப்படியான நிலையில் புதிய ஐபோன்களில் 1080p துல்லியமான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
ஆனால் முன்னைய ஐபோன்கள் 720p வீடியோ அழைப்புக்களுக்கு மாத்திரமே சப்போர்ட் செய்யும்.
எனினும் இக் குறைபாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களிலும் 1080p வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
ஆப்பிளின் புதிய இயங்குதளப் பதிப்பான iOS 14.2 இனை அப்டேட் செய்வதன் மூலம் குறித்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இம் மாற்றமானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.