புதிய சாதனை படைத்தது டிக்டாக்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
55Shares

மொபைல் அப்பிளிக்கேஷன்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் பிரபல நிறுவனமான App Annie ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இதன்படி டிக் டாக் அப்பிளிக்கேஷன் ஆனது அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் அப்பிளிக்கேஷன் எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

பேஸ்புக் அப்பிளிக்கேஷனின் தரவிறக்க எண்ணிக்கையையும் தாண்டி இவ்வாறு சாதனை நிலைநாட்டியுள்ளது டிக் டாக்.

அடுத்த வருடமளவில் டிக் டாக்கின் மாதாந்த ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை எட்டிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டாம் இடத்தில் பேஸ்புக் அப்பிளிக்கேஷனும், மூன்றாம் இடத்தில் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனும் காணப்படுவதுடன், இவற்றிற்கு அடுத்த இடத்தினை Zoom அப்பிளிக்கேஷன் பிடித்துள்ளது.

அதேபோன்று ஐந்தாம் இடத்தில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்