பெரும்பாலான மொபைல் அப்பிளிக்கேஷன்களுக்கு அதன் லைட் பதிப்பும் அறிமுகம் செய்வது வழக்கமாகும்.
இப் பதிப்பானது குறைந்தளவு வேகம் கொண்ட இணைய இணைப்பிலும் செயற்படக்கூடியதாக இருக்கும்.
இதேபோன்று இன்ஸ்டாகிராமிற்கும் லைட் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் Instagram Lite அப்பிளிக்கேஷன் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் Instagram Lite அப்பிளிக்கேஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
2MB கோப்பு அளவுடையதாக இந்த அப்பிளிக்கேஷன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தியாவின் 9 மொழிகளில் Instagram Lite அப்பிளிக்கஷனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.