ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் அப்பிளிக்கேஷன்களை தடை செய்ய தீர்மானம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
27Shares

தற்போது பல்வேறுவிதமான வியாபார செயற்பாடுகளும் ஒன்லைனிற்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்த வரிசையில் கடன் வழங்கும் திட்டங்களும் ஒன்லைன் மயப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் இவ்வாறு கடன் வழங்கும் ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களை தயாரித்து அதன் மூலம் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இச் செயற்பாடு இந்திய அளவில் மிகவும் அதிகரித்துள்ளது.

இதனால் கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 158 வரையான உடனடி கடன் வழங்கும் அப்பிளிக்கேஷன்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானாவின் பொலிசார் கூகுள் நிறுவனத்திடம் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்