டெலிகிராமில் குழு உரையாடலை ஏற்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
3Shares

வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுவதும், அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான குறுஞ்செய்தி செயலியாக டெலிகிராம் காணப்படுகின்றது.

இச் செயலியில் ஏற்கணவே குழுவாக சட் செய்யும் வசதி தரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் குழு உறுப்பினர்களிடையே குரல்வழி அழைப்பினை ஏற்படுத்தி உரையாடக்கூடிய (Group Voice Call) வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ் வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இப்போது பார்க்கலாம்.

முதலில் டெலிகிராம் அப்பிளிக்கேஷனை திறந்து Group Chat விண்டோவிற்கு செல்லவும்.

இங்கு குழு உறுப்பினர்கள் விபரம் உட்பட Notification Settings மற்றும் மேலும் சிலவற்றினை காணலாம்.

தற்போது இப் பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Start Voice Chat என்பதை தெரிவு செய்யவும்.

இதன்போது பொப்பப் விண்டோ ஒன்று தோன்றும்.

இங்கு அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய உறுப்பினர்களை தெரிவு செய்து குரல்வழி அழைப்பினை தொடர முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்