ஆப்பிள் நிறுவனமானது தனது ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து Vybe Together எனும் டேட்டிங் அப்பிளிக்கேஷனை அதிரடியாக நீக்கியுள்ளது.
இதற்கான காரணம் தெரியாது பயனர்கள் குழப்பமடைந்திருந்தனர்.
இந்நிலையில் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த அப்பிளிக்கேஷன் ஊடாக ரசகிய ஒன்றுகூடல்கள் மற்றும் பார்ட்டிகள் போன்றன அதிகளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளன.
தற்போது உலக நாடுகள் பலவும் கொவிட்-19 வைரஸ் உடன் போராடிக்கொண்டிருக்கும்போது இந்நடவடிக்கைளால் அச்சுறுத்தல் ஏற்படும் என கருதியதனாலேயே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
அதாவது பலர் ஓரிடத்தில் ஒன்றுகூடும்போது கொவிட்-19 பரவல் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.