டெலிகிராம் அப்பிளிக்கேஷன் பயனர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
14Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனினை பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் பல பயனர்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.

அதேநேரம் வாட்ஸ் ஆப்பிற்கு பதிலாக வேறு அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் டெலிகிராம் அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட 72 மணி நேரத்தில் மாத்திரம் சுமார் 25 மில்லியன் பயனர்கள் புதிதாக வாட்ஸ் ஆப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 500 மில்லியன் பயனர்களின் எண்ணிக்கை டெலிகிராம் எட்டியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்