வாட்ஸஅப்பால் கடுப்பான மக்கள்; லட்சக் கணக்கில் குவிந்த புதிய பயனர்களால் திணறிவரும் Signal நிறுவனம்!

Report Print Ragavan Ragavan in ஆப்ஸ்
225Shares

வாட்ஸஅப்பின் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒத்துவராத நிலையில், மில்லியன் கணக்கான பயனர்கள் Signal செயலியை பயன்டுத்த தொடங்கியதால், அந்நிறுவனம் தொழிநுட்ப சிக்கலால் திணறிவருகிறது.

உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றான Whatsapp, அதன் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

அந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமாக பயனர்களின் பிரைவசிக்கு உத்தரவாதம் இல்லை எனக் கருதப்படுவதால், உலகம் முழுவதிலிருந்து மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மேலும், தொடர்ந்து whatsappஐ பயன்படுத்த விருப்பமில்லாத பயனர்கள், தங்களுக்கான வேறு தகவல் தொர்பு செயலிகளைத் தேடிச் செல்லத் தொடங்கினர்.

இதனால் Signal மற்றும் Telegram ஆகிய செயலிகளுக்கு பயணர்கள் படையெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக சிக்னல் செயலியை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இதனால், இரு தினங்களுக்கு முன் கூடுதலான சர்வர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிக்னல் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இருப்பினும், இரண்டு நாட்களாக பயனர்களின் எண்னிக்கை மில்லியன் கணக்கில் உயருவதால் சிக்னல் அதன் சேவையில் திணறிவருகிறது.

பயனர்கள் பலரும் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் என இரண்டிலும் அனுப்பப்படும் செய்திகள் சென்றடையவில்லை என தொடர்ந்து புகாரளித்து வருகினறனர்.

இதனைத் தொடர்ந்து, Signal நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "சிக்னல் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. சேவையை விரைவாக மீட்டெடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்" எனப் பதிவிட்டது.

மேலும், ஒவ்வொரு நாளும் புதிய சேவையகங்களையும் கூடுதல் திறனையும் கடுமையான வேகத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

பயனர்கள் வந்த வேகத்தில் வேறு செயலியைப் பார்த்து சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில், Signal அதன் சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீராக்கும் பணியில் முனைந்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்