ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
ஞாபக சக்தி என்பது தகவல்களை மனதில் சேமித்து, தேவைப்படும்போது மீண்டும் நினைவுபடுத்தும் மூளையின் திறன் ஆகும்.
இதை அதிகரிக்க யோகா, சரியான உணவு, மனப் பயிற்சிகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் உதவுகின்றன.
மேலும் இது மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. வால்நட்ஸ்- தொடர்ந்து வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
2. வல்லாரை கீரை- வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஞாபக மறதி நோய்களான அல்சைமர், டிமென்ஷியா வரும் அபாயமும் குறையும்.
3. செவ்வாழை- செவ்வாழையில் வைட்டமின் பி6 என்னும் பைரிடாக்ஸின் உள்ளது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் முக்கியமான சத்து உள்ளது.
4. காளான்- காளானில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. வைட்டமின் பி12 உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
5. பன்னீர்- பன்னீரில் வைட்டமின் பி12 மட்டுமின்றி, புரோட்டீனும் அதிகம் உள்ளது. இதனால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு, உடல் சோர்வும் தடுக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |