பதின்மவயதுப் பெண்ணை தாக்கிய ஆறு பெண்கள்: சுவிஸ் நீதிமன்றத்தின் முடிவு
சுவிட்சர்லாந்தில், 16 வயதுப் பெண் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய ஆறு பதின்மவயதுப் பெண்களுக்கு நீதிமன்றம் ஒன்று தண்டனை வழங்கியுள்ளது.
பதின்மவயதுப் பெண்ணை தாக்கிய ஆறு பெண்கள்
சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Oensingen என்னுமிடத்தில், 14 முதல் 16 வயது வரையுள்ள ஆறு பெண்கள், 16 வயதுப் பெண் ஒருவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள்.

அத்துடன், அந்த தாக்குதலை படம் பிடித்து, அந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் உள்ளார்கள் அவர்கள்.
கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த தாக்குதலில், கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொஞ்சம் கூட வருத்தப்படாமல், அந்த விடயம் குறித்து தங்கள் மீது இணையத்தில் விமர்சனம் எழுந்தபோதும், விமர்சனம் குறித்து கேலியும் செய்துள்ளார்கள் அந்தப் பெண்கள்.
ஆகவே, Solothurn மாகாண அதிகாரிகள் அந்தப் பெண்கள் மீது விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
விசாரணையின் முடிவில், அவர்கள் ஆறு பேருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அவர்கள் அனைவருமே பதின்மவயதுப் பெண்கள் என்பதால்,
அவர்கள் பெயர் முதலான எந்த அடையாளங்களோ, அவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |