துபாயில் சாலை விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழப்பு
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக லொறி ஒன்று சாலையில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது அந்த சாலையில் இந்திய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த மினிவேன் ஒன்று, அந்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்தை சந்தித்துள்ளது.
இதில், 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடனும், 4 பேர் மிதமான காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மினி வேனை ஓட்டிய ஓட்டுநர், கவனக்குறைவாகவும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்ததால், லாரியின் பின்புறத்தில் மோதியதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
#News | Dubai Police Warns of Stopping Dangers in the Middle of the Road
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) June 8, 2026
Details:https://t.co/1FMgEBwXx2#RoadSafety pic.twitter.com/hPUuSwFt0u
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள துபாயில் உள்ள இந்திய தூதரகம், "விபத்து குறித்து அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
Deeply saddened by the tragic road accident in Dubai that claimed the lives of several Indian workers.
— India in Dubai (@cgidubai) June 8, 2026
Our officials visited the hospital, met the injured Indians, and are working closely with local authorities to provide all possible assistance and support.
Our heartfelt…
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் சட்ட உதவிகளையும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |