நச்சு வாயுவால் கொத்தாக 2000 பேர்களை படுகொலை செய்த நபர்: திகிலடைய வைக்கும் பின்னணி
சிரியாவில் நச்சு வாயுவால் சுமார் 2,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த மகேர் ஹபீஸ் அல்-அசாத் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நூற்றாண்டின் மிக மோசமான
இந்த மகேர் ஹபீஸ் அல்-அசாத் சிரியா ஜனாதிபதியாக இருந்த அசாத்தின் இளைய சகோதரனாவார். மட்டுமின்றி, 2011ல் இருந்தே ஜனாதிபதி அசாத்தை இயக்குபவர் இந்த மகேர் அசாத் என்றே ரகசியமாக பேசப்பட்டு வந்துள்ளது.
சிரியா உள்நாட்டுப் போரில் முதல் முறையாக நச்சு வாயு தாக்குதலை முன்னெடுத்தவர் இந்த மகேர் அசாத். Ghouta இரசாயன தாக்குதல் என அறியப்படும் இந்தக் கொடூர சம்பவமானது நூற்றாண்டின் மிக மோசமான போர்க்குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க வெளியிட்டிருந்த அறிக்கையில், 426 சிறார்கள் உட்பட மொத்தம் 1429 பேர்கள் Ghouta தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மட்டுமின்றி இந்த தாக்குதலுக்கு அசாத்தின் படைகள் மீது அரபு லீக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் குற்றம் சாட்டப்பட்டது.
தாக்குதல் சமயத்தில் சிரியா இராணுவத்தின் கட்டுப்பாடு அசாத்திடம் இருந்தது. ஆனால் சிரியாவின் சிறப்புப் படையானது அசாத்தின் இளைய சகோதரர் மகேரின் கட்டுப்பாட்டில் இயங்கியது.
2000 ஆம் ஆண்டு சிரியா ஜனாதிபதி ஹபீஸ் அல்-அசாத்தின் மரணத்தை அடுத்து வெடித்த அரசியல் நெருக்கடியை மொத்தமாக முடிவுக்கு கொண்டுவந்தவர் மகேர் அசாத் என்றே கூறப்படுகிறது.
மேலும், லெபனான் பிரதமர் ரஃபிக் ஹரிரியை கொலை செய்ததற்காக ஐ.நா அறிக்கைகளில் மகேர் இடம்பெற்றார். 2011ல் உள்நாட்டுப் போர் வெடித்த போது பொதுமக்களால் அச்சத்துடன் பார்க்கப்பட்டவர் மகேர் அசாத்.
நாடு கடத்த வேண்டும்
2011ல் வெடித்த உள்நாட்டுப் போரினை அசாத் அரசாங்கம் ஒடுக்கியதன் பின்னர் 157,000 பேர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தனர் என்றே சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் ஆணையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதில் 5,274 சிறார்களும் 10221 பெண்களும் உட்படுவார்கள். மகேர் அசாத்தை நாடு கடத்த வேண்டும் என்று துருக்கியின் அப்போதைய பிரதமர் எர்டோகன் கோபத்துடன் பதிலளித்திருந்தார்.
மேலும் ஏப்ரல் 2011 ல், நாட்டில் மனித உரிமை மீறல்களை முன்னெடுத்ததற்காக மகேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்தது.
நவம்பர் 2023 ல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மகேருக்கு பிரான்ஸ் கைதாணை பிறப்பித்தது.
தற்போது அசாத் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் மகேர் அசாத் எங்கிருக்கிறார் அல்லது என்ன ஆனார் என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |