தினமும் 6 மிளகை சாப்பிட்டு வாருங்கள்! அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீங்க
சுற்று சூழல் மாறுதல் காரணமாக நோய் தொற்று ஏற்படுவது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை நம் வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பொருள்களை பயன்படுத்தும் பொருட்களை கொண்டு சரி செய்து விடலாம். இந்த பிரச்சனைக்கு தினமும் காலை எழுந்தவுடன் 6 மிளகை சாப்பிட்டு பாருங்கள்.
மிளகின் பயன்கள்:
மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் மிளகில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை உடலுக்குள் நுழையும்.
பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். மேலும் ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்து கொள்ளலாம்.
மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
வயிறு சரியில்லாதவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைத்தால் மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.