அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுவதாலேயே தான் கனடா மீது வரிகள் விதிப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் பெருமளவில் போதைப்பொருள் ஒன்றைக் கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Osoyoos என்னும் எல்லை கடக்கும் இடத்தில் கனேடிய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் கனேடியர் ஒருவரது ட்ரக்கை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.
அதிகாரிகள் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், 70 கிலோ அளவிலான கொக்கைன் என்னும் போதைப்பொருள் செங்கல் வடிவில் அந்த ட்ரக்குக்குள் மறைத்துவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது, 140,000 முறை பயன்படுத்தப்படும் அளவுடைய போதைப்பொருள் என்கிறார்கள் அதிகாரிகள்.
ட்ரக்கை இயக்கிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |