தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீனா... எச்சரிக்கை விடுத்த ஸ்டார்மர்
சீனா இன்னும் பிரித்தாவியாவுக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வரையறுக்கும் சக்தி
வெளிவிவகாரக் கொள்கை குறித்த தனது வருடாந்திர கில்ட்ஹால் உரையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடன் ஈடுபடத் தவறுவது கடமையை மீறும் செயல் என்றும் பிரதமர் வாதிட்டுள்ளார்.

டேவிட் கேமரூன் ஆட்சியின்போது சீனாவுடனான உறவுகள் பொற்காலமாக இருந்தது எனும் கூற்றையும் அவர் நிராகரித்தார். ஆனால், சீனா மிகப்பெரிய அளவு, லட்சியம் மற்றும் புத்தி கூர்மை கொண்ட நாடு. தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தில் ஒரு வரையறுக்கும் சக்தி என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், சீனா பிரித்தானியாவையும் குறிவைக்கிறது என தெரிவித்துள்ள ஸ்டார்மர், நமது பாதுகாப்பை உறுதி செய்வதில் மெத்தனம் கூடாது என்றும், அது நமது முதல் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மற்ற துறைகளில் ஒத்துழைக்க நம்மை நாமே அனுமதிக்கிறோம் என்றார்.
ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் உளவு வழக்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா-சீன உறவுகளில் ஸ்டார்மரின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
உறுதி செய்ய
கிறிஸ்டோபர் கேஷ், மற்றும் கிறிஸ்டோபர் பெர்ரி ஆகியோர் பாராளுமன்றத்திலிருந்து முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீன அரசாங்கத்திற்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

ஆனால், இருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்தனர். இந்த நிலையில், அரசாங்கத்தின் முக்கிய சாட்சி சீனாவை பிரித்தானியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை உறுதி செய்ய மறுத்ததை அடுத்து, விசாரணை நிறுத்தப்பட்டது.
இது சீனாவுடனான உறவைப் பேணுவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே வழக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதா என்ற சர்ச்சையைத் தூண்டியது. ஆனால், அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டை மொத்தமாக மறுத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |