குக் வித் கோமாளி புகழ் காதலி இவர் தான்! அவரே வெளியிட்ட புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்
பிரபல காமெடியன் ஆன, குக் வித் கோமாளி புகழ் தன்னுடைய காதலியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் புகழ், இதைத் தொடர்ந்து இவர் தற்போது திரையுலகில் உள்ள முக்கிய நட்சத்திரங்களான சந்தானம், அஜித் போன்றோர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலியின் புகைப்படத்தை பதிவிட்டு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பார்ட்னர் லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.