வேற்றுக்கிரகவாசிகள் மேற்கொண்ட Genetic Harvest - மனிதர்களை சந்திக்காதது ஏன்?
வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களை சந்திக்காதது ஏன் என நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் மேற்கொண்ட Genetic Harvest
அண்டவெளியில் உள்ள கோடிக்கணக்கான கோள்களில் ஏதாவது ஒன்றில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நவீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அப்படி இருந்தால் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்ததற்கான சாத்தியங்கள் அல்லது ஆதாரங்கள் பூமியில் இருந்திருக்க வேண்டும்.
வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளதாக விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படி பூமிக்கு வரும் வேற்றுக் கிரகவாசிகள் ஏன் மனிதர்களை சந்திப்பதில்லை, மனிதர்களின் கண்களுக்கு தெரிவதில்லை என உண்மையின் தரிசனம் நிகழ்வில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி அமெரிக்காவின் கொலராடோவின் அலமோசாவில் உள்ள பண்ணையில் லாயத்தில் வைக்கப்பட்டிருந்த 3 வயது அப்பலூசா பெண் குதிரையான ஸ்னிப்பி மாயமானது.
2 நாள் கழித்து அந்த குதிரை சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதன் மூளை, இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்கள் மிக துல்லியமாக அகற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அதன் உடலிலோ அல்லது தரையிலோ இரத்தம் முற்றிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதே போல், அந்த காலக்கட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இதில், விலங்குகள் கடத்தப்பட்டு, 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்படுகிறது. அதன் உறுப்புகள் மிகநேர்த்தியாக அகற்றப்பட்டுள்ளன.
பூமிக்கு வருகை தந்துள்ள வேற்றுக் கிரகவாசிகள், ஒரு Genetic Harvest செய்வதற்காக விலங்குகளை கடத்தி சென்று ஆராய்ச்சி செய்திருக்கலாம், வேறு புதிய விலங்குகளை உருவாக்க முயற்சித்திருக்காலம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மனிதர்களை சந்திக்காதது ஏன்?
அப்படியானால் வேற்றுகிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் பூமியில் இருந்திருக்க வேண்டும். லண்டனுக்கு மேற்காக 90 மைல் தொலைவில் உள்ள பிரித்தானியாவின் சில பாரம்பரியா கிராமங்கள் அசாதாரண குறியீடுகளுக்கு பெயர் பெற்றவை.
1978 ஆம் ஆண்டு அங்குள்ள பயிர் நிலங்களில் Crop Circles எனப்படும் புதிய உருவங்கள் திடீரென உருவாகின. மிகநேர்த்தியாக பயிர்களை வெட்டி உருவாக்கப்பட்ட இந்த Crop Circles ஓவியங்கள், வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.

அந்த பகுதிகளில் வானத்தில் பெரும் சத்ததுடன் ஒளிப்பிழம்புகள் வந்து சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இந்த Crop Circlesக்கள் வேற்றுகிரக வாசிகளால் உருவாக்கப்பட்டிருந்தால் அதற்கான நோக்கம் என்ன? அவர்கள் அதன் மூலம் மனிதர்களிடம் சொல்ல வருவது என்ன? அவர்கள் ஏன் மனிதர்களிடம் அதை நேரடியாக தெரிவிக்கவில்லை?
இதே போன்று கனடா, ஜெர்மனி, என உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் ஒரே இரவில் பாரிய Crop Circlesக்கள் உருவாக்கப்பட்டன.
இது மனிதர்களால் உருவாக்க முடிந்தாலும், ஒரே இரவில் உருவாக்க சாத்தியமில்லை. அதற்கு பாரிய திட்டமிடல், நவீன கருவிகள், பெரிய மனித குழு தேவை என கருதுகின்றனர்.
இந்த Crop Circlesக்கள் அருகே உள்ள மண் மாதிரியை ஆய்வு செய்த போது, சாதாரணமாக பூமியில் காணப்படாத ஒருவகை எரிபொருள் கழிவுகள் மற்றும் வெப்பத்துடன் கூடிய மாற்றங்கள் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

அதே போல் சில சமயங்களில் அங்கு சென்ற மனிதர்களின் செல்போன் போன்ற கருவிகள் செயலற்று போவதாகவும், வித்தியாசமான உணர்வுகள் தமக்கு ஏற்படுவதாகவும், வித்தியாசமான சத்தங்கள் காதுகளில் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிலர் அங்கே செல்லும் போது வித்தியாசமாக உணர்ந்ததாகவும், புரிந்து கொள்ள முடியாத காரியங்களை யாரோ கூறுவதை கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பூச்சிகள் போன்ற எந்த உயிரினங்களும் வருவதில்லை.
மனிதர்களை வேற்றுகிரகவாசிகள் ஏன் சந்திக்கவில்லை, மனிதர்களால் ஏன் வேற்றுகிரகவாசிகளை பார்க்க முடிவதில்லை என்பது குறித்து zoo hypothesis மற்றும் Jungle hypothesis மூலம் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |