ஜேர்மன் மீனவர்களுக்கு உருவாகியுள்ள எதிர்பாராத பிரச்சினை
பால்டிக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு இது ஒரு நல்ல வருவாயைக் கொடுக்கும் காலம் ஆகும்.
ஆனால், ஜேர்மன் மீனவர்களுக்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
மீனவர்களுக்கு உருவாகியுள்ள எதிர்பாராத பிரச்சினை
இது herring என்னும் ஒரு வகை மீன்கள் அதிகம் இடம்பெயரும் காலம் என்பதால், பால்டிக் கடலில் அந்த மீன்கள் அதிகம் கிடைப்பதுண்டு.

ஆனால், ஜேர்மன் மீனவர்கள் கடலில் வலையை விரித்துவிட்டு வந்து பார்த்தால், வலையில் சிக்கிய மீன்களைக் காணவில்லையாம்.
விடயம் என்னவென்றால், கடல் சிங்கங்கள் (seals) என்னும் பிராணிகள் பால்டிக் கடல் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.
அவை, வலைகளில் சிக்கியுள்ள மீன்களை கபளீகரம் செய்துவிட்டுச் சென்றுவிடுகின்றன.
ஆக, மீனவர்கள் வலையை இழுத்துப் பார்க்கும்போது, அவற்றின் மீன்கள் எதுவும் இருப்பதில்லையாம்.
ஆகவே, கொஞ்ச நேரம் மட்டும் வலையைப் போட்டு வைத்து விட்டு, கடல் சிங்கங்கள் மீன்களை காலி செய்யும் முன் வலையை எடுத்துவிடலாம் என்றால், கொஞ்சம் மீன்கள்தான் வலையில் சிக்குகின்றனவாம்.
நல்ல மீன்பிடி சீஸன், மீன்களால் நல்ல வருவாய் கிடைக்கும் என மீனவர்கள் காத்திருந்த நிலையில், இந்த கடல் சிங்கங்களால் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |