பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருக்கும் ஜேர்மனி... கனடாவைப் பின்பற்ற அறிவுறுத்தல்
ஜேர்மனி, பணியாளர்கள் பற்றாக்குறையால் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், அதை சமாளிக்க, கனடா பின்பற்றும் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என கூட்டணிக்கட்சி ஒன்று அறிவுறுத்தியுள்ளது.
ஜேர்மனியின் FDP கட்சி, ஜேர்மனியில் நிலவும் திறன்மிகுப்பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க கனடா பின்பற்றுவதைப் போன்ற புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று வலியுறுத்திவருகிறது.
கனேடிய அனுபவம், இந்த முறையில், 60 சதவிகிதத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரைப் பெறலாம் என காட்டியுள்ளது என்று கூறியுள்ள FDP கட்சியின் துணைத்தலைவரான Johannes Vogel, ஆகவேதான் நாம் புள்ளிகள் அடிப்படையிலான முறையை அலட்சியப்படுத்தாமல் புதிய புலம்பெயர்தல் விதிகளில் அதை அறிமுகம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
Photo: picture alliance/dpa | Julian Stratenschulte