பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோரைக் கடத்துவோருக்கு எதிராக பிரித்தானியாவுடன் கைகோர்க்கும் நாடு
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்துவோருக்கு எதிராக, பிரித்தானியாவுடன் கைகோர்க்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் நடக்கும் உயிரிழப்புகள்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக, உயிரைப் பணயம் வைத்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் ஆபத்தான வகையில், சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
அப்படி, தரமற்ற ரப்பர் படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும்போது, படகு சேதமடைந்து, அல்லது அளவுக்கு மீறி ஆட்கள் ஏற்றப்படுவதால் கவிழ்ந்து, சிறுகுழந்தைகள் உட்பட பலர் இதுவரை பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
பிரித்தானியாவுடன் கைகோர்க்கும் ஜேர்மனி
இந்த படகுகள் பெரும்பாலும் பிரான்சிலிருந்துதான் புறப்படுகின்றன.
பிரான்சிலிருந்து ஆட்கடத்தல்காரர்கள். இந்த புலம்பெயர்ந்தோரை ஏமாற்றி, சில நேரங்களில் கட்டாயப்படுத்தி கூட சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புகிறார்கள்.
Dan Kitwood/Getty Images
ஆக, ஆங்கிலக்கால்வாய் வழியாக ஆபத்தான வகையில் பிரித்தானியாவுக்குள் நுழைய புலம்பெயர்ந்தோருக்கு உதவும் விடயத்தின் பின்னணியில் பிரான்சிலுள்ளவர்கள் இருப்பதாக கருதப்பட்டது.
விடயம் என்னவென்றால், அப்படி புலம்பெயர்ந்தோரை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாய் மூலம் அனுப்புவதில் ஜேர்மனியை மையமாகக் கொண்ட சில கும்பல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்துவோருக்கு எதிராக, பிரித்தானியாவுடன் கைகோர்க்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
அதன் ஆரம்ப முயற்சியாக, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் ஆட்கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில், ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேஸரும், பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooperம் கையெழுத்திட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |