கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
நடிகர் கமல்ஹாசனின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம், மற்றும் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இதையடுத்து சென்னை திரும்பிய பிறகு அவருக்கு இருமல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கடந்த 22ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதாவது, கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகிவிட்டார். இருப்பினும் டிசம்பர் 3ம் திகதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் 4ஆம் திகதிக்கு பிறகு அவர் தனது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.