கொழும்பில் உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: 3 பேர் வரை உயிரிழப்பு
கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உணவகத்தில் தீ விபத்து
கொழும்பு - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையில் 4 பேர் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான 03 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய தலவத்துகொட பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |