பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு
தன் மகள்களை சந்திக்க அனுமதி மறுப்பதாக, குகையில் வாழ்ந்தரஷ்யா பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குகையில் ரஷ்யா பெண்
கடந்த ஜூலை 11 ஆம் திகதி, கர்நாடகாவிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், அங்கிருந்த குகைக்குள்வெளிநாட்டு பெண்ணும் அவரது 2 மகள்களும் தங்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், அந்த பெண் ரஷ்யா நாட்டை சேர்ந்த நினா குட்டினாவுடன் (40), அவரது மகள்களான ப்ரேயா (6) மற்றும் அமா (4) ஆகிய இருவரும் அந்த குகைக்குள் இரண்டு வாரங்களாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், அந்த குழந்தைகளின் தந்தையான இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ட்ரோர் (Dror Goldstein) அந்த பெண் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கணவர் குற்றச்சாட்டு
இது தொடர்பாக பேசிய அவர், நான் நீனா மற்றும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கி அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வழங்க முயன்றேன். ஆனால், நீனா என்னை வாய்மொழி துஷ்பிரயோகம் செய்தார்.
மேலும், அவர் பணத்துக்காக என்னை பயன்படுத்துவது போல் உணர்ந்ததால் அவர்களிடமே இருந்து விலக முடிவெடுத்தேன். நான் அவர்களை பார்க்க அடிக்கடி கோவா சென்ற போது, அவர் என்னை சந்திக்க மறுத்தார். அடிக்கடி சொல்லாமல் மாயமாகி விடுவார்.
நான் என் குழந்தைகளுடன் இருக்க விரும்பினேன். ஆனால், நான் குழந்தைகளை சந்திக்க ஒருபோதும் அவர் அனுமதிக்கவில்லை. மேலும், குழந்தைகள் என்னிடமிருந்து விலகி இருக்கும் வகையில், குழந்தைகளை மூளைசலவை செய்ய தொடங்கினார்.
அவர்களை சமூகத்தில் பழக அனுமதிக்காமல், மூடிய குழுவில் வைத்துள்ளார். என் மகள்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து அவர்களுக்கு நிதி ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் உதவ விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |