ஹமாஸின் தலைமையகத்தை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்: முக்கிய ராணுவ தளபதி உயிரிழப்பு
காசாவின் கான் யூனிஸ் பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹமாஸின் தலைமையகம் மீது தாக்குதல்
செவ்வாய்க்கிழமை காசாவின் முக்கிய பகுதியான கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் இருப்பிகளை குறிவைத்து இஸ்ரேலின் பாதுகாப்பு படை(IDF) தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஹமாஸின் கடற்படை போலிஸ் தலைமையகமாக செயல்பட்டு வந்த கட்டிடம் அழிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அழிக்கப்பட்ட ஹமாஸ் தலைமையகம், இஸ்ரேலுக்கு எதிரான பல்வேறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், ஹமாஸின் இராணுவ பிரிவு தளபதியான இஸ்மாயில் அல்-லஹாம் உட்பட பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு காசா பகுதியில் அமைந்திருந்த ஹமாஸின் பல ஆயுத கிடங்குகளையும் இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியுள்ளது.
ஆயுத கிடங்குகளில் ஏற்பட்ட இரண்டாம் நிலை வெடிப்புகளை வைத்து அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான பாதிப்புகளை குறைப்பதற்காக துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை முன்னரே வழங்கப்பட்டதையும் IDF சுட்டிக்காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |