இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாரான சீனாவின் எதிரி நாடு
சீனாவின் எதிரி நாடொன்று இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாராக உள்ளது.
BrahMos ஏவுகணை இந்தியாவின் உச்சபட்ச தரமான பலவகையான தாக்குதல் திறன் கொண்ட ஆயுதமாகும்.
Operation Sindoor-இல் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலில் இந்த ஏவுகணை முக்கிய பங்கு வகித்தது.
இதனைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகள் இந்த ஏவுகணையை வாங்கும் ஆர்வம் காட்டுகின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததின்படி, 14-15 நாடுகள் BrahMos ஏவுகணையை வாங்க விரும்புகின்றன.
இதில் சீனாவின் எதிரியாகக் கருதப்படும் பிலிப்பைன்ஸ் முதலாவது நாடாக இந்தியாவுடன் 2022-இல் 375 மில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொண்டது.
BrahMos வாங்க விரும்பும் நாடுகள் யாவை?
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர், புரூனை, ஈகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய ரபி அமீரகம், கத்தார், ஒமான், பிரேசில், சிலி, அர்ஜென்டினா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இதில் அடங்கும். இதில் சில நாடுகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எதிரியாக செயல்படுகின்றன.
இந்தோனேஷியா 450 மில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், வியட்நாம் 700 மில்லியன் டொலர் மதிப்பில் பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BrahMos ஏவுகணையின் சிறப்பம்சங்கள்
- இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்தது.
- Mach 3 (3704 km/h) வேகத்தில் பறக்கும்.
- 450 - 800 கிமீ வரை தாக்கும் திறன்.
- வானில், நிலத்தில், கடலில் இருந்து தாக்க முடியும்.
- ரேடார் கண்காணிப்பில் விழாமல் குறைந்த உயரத்தில் பறக்க முடியும்.
- 3 டன் வெடிக்கும்திறன் கொண்ட வெடிபொருட்களை ஏந்த முடியும்.
- ஒவ்வொரு ஏவுகணைக்கும் ரூ.34 கோடி செலவாகும்.
Operation Sindoor-இல், இந்தியா பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை மிகக் கூர்மையான தாக்கத்துடன் அழித்தது, இதன் மூலம் BrahMos உலகளவில் கவனம் பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BrahMos missile export countries, India Philippines BrahMos deal, BrahMos missile Operation Sindoor, BrahMos China reaction, BrahMos Southeast Asia deals, BrahMos missile specifications, India Russia missile collaboration, BrahMos missile price and range, BrahMos missile global buyers, India defense export BrahMos