இந்த அணி தான் டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது! காரணத்துடன் கூறிய இன்சமாம் உல் ஹக்
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளது.
தனது யூடியூப் சேனிலில் பேசி இன்சமாம் உல் ஹக், எந்த ஒரு தொடரிலும் இந்த அணி தான் வெற்றிப்பெறும் என சொல்லமுடியாது, வெல்வதற்கு எவ்வளவு வாய்ப்பிருக்கிறது என தான் கூற முடியும்.
எனது கருத்துப்படி, மற்ற அணிகளை விட இந்திய டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தில்.
அதேசமயம் இந்திய அணியில் அனுபவமிக்க டி20 வீரர்கள் இருக்கிறார்கள். அதிகபடியான இந்திய பேட்டிஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சளார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்களில் விளையாடிய நிறைய அனுபவம் இருக்கிறது.
சமீபத்தில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது, இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர் என கூறினார்.
டி20 உலகக் கோப்யைில் அக்டோபர் 24ம் திகதி இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இறுதிப்போட்டிக்கு முன் நடக்கும் இறுதிப்போட்டி போன்றது.
இந்த போட்டிக்கு இருக்கும் பரபரப்பு வேறு எந்த போட்டிக்கும் இருக்காது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வீரர்களின் மன உறுதிஅதிகரிக்கும் மற்றும் அவர்களுக்கு இருக்கும் அழுத்தம் 50% குறையும் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளது.