லூவ்ரே அருங்காட்சியகக் கொள்ளை தொடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு
பிரான்சில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நகை கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 38 வயதுடைய ஒரு பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள லா குர்னூவ் (La Courneuve) என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
பிரான்ஸ் பொலிஸார் கடந்த வாரம் இந்த பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

அவர் மீது, இந்த திட்டமிட்ட கொள்ளையில் உடன்பாடு மற்றும் குற்றவாளிகளுடன் சதி ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது நீதிமன்ற மஜிஸ்திரேட் அவரை காவலில் வைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உள்ளார்.
அதேநேரம், திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நகைகள் பிரான்சின் அரச குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்றும், மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு விலைமதிப்புள்ளவை என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளில் லூவ்ரே அருங்காட்சியகம் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அருங்காட்சியகத்தின் முற்றம் வெறுமையாக காணப்பட்ட நிலை, பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸ் முழுவதும் இந்த சம்பவம் குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
பாதுகாப்பு முறைகள், அருங்காட்சியகத்தின் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய யுக்திகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Louvre Museum jewel heist, France jewel robbery 2025, woman charged Louvre theft, Paris museum security breach, royal jewels stolen France, Louvre robbery investigation, French police jewel theft, organized crime Louvre, La Courneuve woman arrested, high-profile museum heists