கொல்லப்பட்ட காதலனின் உடலை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: அதிரவைக்கும் ஒரு செய்தி
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், தன் குடும்பத்தினரால் கொல்லப்பட்ட தனது காதலனின் உடலை திருமணம் செய்துகொண்டார் ஒரு இளம்பெண்.
அதிரவைக்கும் ஒரு செய்தி
மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சஷ்கமும் (Saksham Tate, 20) ஆன்ச்சலும் (Aanchal Mamidwar, 21) மூன்று ஆண்டுகளாக காதலித்துவந்தார்கள்.

ஆனால், அவர்கள் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆன்ச்சலின் பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கடைசியாக, வியாழக்கிழமை, திருமணத்துக்கு சம்மதிப்பதாக ஆன்ச்சல் குடும்பத்தினர் கூறியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், திருமணத்துக்காக வந்த சஷ்கமிடம் சண்டை போட்டுள்ளார்கள் ஆஞ்ச்சலின் உறவினர்கள்.
அவர்கள் சஷ்கமை அடித்து நொறுக்க, சஷ்கமை துப்பாக்கியால் சுட்டுள்ளார் ஆஞ்ச்சலின் தம்பி. அடித்து நொறுக்கப்பட்ட சஷ்கம், துப்பாக்கி குண்டும் பாய்ந்ததில் உயிரிழந்துவிட்டார்.
காதலனின் உடலை திருமணம் செய்த இளம்பெண்
வெள்ளிக்கிழமை சஷ்கமுடைய இறுதிச்சடங்குக்காக அவரது உறவினர்கள் தயாராகிக்கொண்டிருக்க, மூன்று ஆண்டுகள் காதலித்த தன் காதலனைப் பிரிந்து தவித்த ஆன்ச்சல் அவரது உடலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
அவர் சஷ்கமின் உடலை திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

சஷ்கமும் ஆன்ச்சலின் சகோதரர்களும் நண்பர்கள்தான். ஆனாலும் அவர் ஆன்ச்சலை காதலித்தபோது, அவர் வேறு பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தங்கள் சகோதரியை திருமணம் செய்துகொடுக்க மறுத்துள்ளார்கள் அவர்கள்.
கடைசியாக, திட்டமிட்டு, திருமணம் என்று கூறி சஷ்கமை வரவழைத்து, திருமண விழாவில் ஆன்ச்சலின் தந்தையும் சகோதரர்களும் ஆடிப்பாடி உண்மையாகவே சஷ்கமை ஏற்றுக்கொண்டது போல நடித்து, நம்பி வந்த அவரை பின்னர் அடித்துக்கொன்றுவிட்டார்கள் என்கிறார் ஆன்ச்சல்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் ஆன்ச்சலின் தந்தை, சகோதரர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |