கரப்பான் பூச்சிகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை பயன்படுத்தி மோசடி! 21 வயது இளைஞர் கைது
சீனாவில் வித்தியாசமான முறையில் ஹோட்டல் மோசடி செய்து வந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட இளைஞர்
சீனாவில் ஜியாங் என்ற குடும்ப பெயரை கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 21 வயது இளைஞர் சிக்கலான மற்றும் வித்தியாசமான மோசடியை நடத்தியதாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயது இளைஞரான ஜியாங் தன்னுடைய கல்லூரி சேர்க்கைக்கு தேவையான நிதியை இழந்ததால், ஹோட்டல்களிடமிருந்து இலவச தங்கல் மற்றும் பண பெறுமதியான இழப்பீட்டை பறிமுதல் செய்யும் சிக்கலான மோசடி திட்டத்தை வகுத்தார்.
அதாவது அவர் பல்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்து, இறந்த கரப்பான் பூச்சிகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மற்றும் முடி இழைகள் போன்ற போலியான சுகாதாரமற்ற நிலைமைகளின் சான்றுகளை உருவாக்கி ஹோட்டல் நிர்வாகத்திடம் எதிர்மறையான ஆன்லைன் விமர்சனங்கள் அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதாக மிரட்டி, இலவச தங்குமிடங்கள் அல்லது நிதித் தீர்வுகளை கோரியுள்ளார்.
10 மாத காலத்தில் ஜியாங் இவ்வாறு பல்வேறு ஹோட்டல்களுக்கு இடை மாறியுள்ளார். சில சமயங்களில் ஒரே நாளில் 3 அல்லது 4 ஹோட்டல்களில் தங்கி தன்னுடைய மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
பிடிபட்ட இளைஞர்
இந்நிலையில் விருந்தினரிடம் இருந்து ஒரே மாதிரியான புகார்கள் மீண்டும் மீண்டும் வருவதை ஹோட்டல் ஊழியர்களின் திடீரென கவனித்த பிறகு, இளைஞரின் மோசடி அம்பலப்படுத்தப்பட்டதோடு ஜியாங்கின் கைதுக்கும் வழிவகுத்தது.
கைதுக்கு பிறகான விசாரணையில் அதிகாரிகள் ஜியாங் கடந்த ஆண்டு முதல் 300 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருந்து, அவற்றில் 63 ஹோட்டல்களிடமிருந்து மொத்தம் $5,200 பறிமுதல் செய்தது தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |