உங்கள் இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்: ஜேர்மன் சேன்ஸலர் வலியுறுத்தல்
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜேர்மனிக்கு வரவேண்டாம் என தான் உக்ரைன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
ஜேர்மன் சேன்ஸலர் கூறியுள்ள தகவல்
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மில்லியன் உக்ரைன் அகதிகளை ஜேர்மனி ஏற்றுக்கொண்டது. +

உக்ரைன் போரைத் தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள 18 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில், 18 முதல் 22 வயது வரையுள்ள இளைஞர்கள் உக்ரைனை விட்டு வெளியேற உக்ரைன் ஜனாதிபதியான வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அனுமதி அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு வரும் உக்ரைன் இளைஞர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆகவே, ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தான், உக்ரைன் இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.
அவர்கள் உக்ரைனுக்குத் தேவை என்றும் அவர்கள் அங்கு சேவை செய்யட்டும் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
அத்துடன், உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை இனி குறைக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக அவர்கள் வேலை தேடிக்கொள்ளும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |