ஜேர்மனியில் திறக்கப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் கோவில்: கங்கை நீரில் கும்பாபிஷேகம்
ஜேர்மனியின் பெர்லின் நகரில் பிரம்மாண்டமான விநாயகர் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் விநாயகர் கோவில்
ஜேர்மனியில் வாழும் இந்து சமூக மக்களின் 21 ஆண்டுகால இடைவிடாத முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் பெர்லின் நகரில் பிரம்மாண்டமான விநாயகர் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஶ்ரீ விநாயகர் கோவில் ஹசென்ஹைடு(Hasenheide) பூங்காவிற்கு அருகில் 17 மீட்டர் உயரம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
அத்துடன் இந்த கோவில் முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்கொடை மற்றும் தன்னார்வலர்களால் கட்டப்பட்டுள்ளது.
கலாச்சார் பன்முகத்தன்மை

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்களை கொண்டு இந்திய கலைஞர்களால் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் சமீபத்தில் 5 நாட்கள் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் புனித நதியான கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரும், பெர்லின் நகர நதி நீரும் கலந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இது இந்தியா மற்றும் ஜேர்மனியின் கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |