மரண பயம்? புடின் மகள்களுக்கு திடீர் உத்தரவு
ரஷ்ய ஜனாதிபதியான புடின், எப்போது வேண்டுமானாலும் தன்னைக் கொல்ல முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்திலிருக்கும் நிலையில், தன் மகள்களுக்கு திடீர் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
புடின் மகள்களுக்கு திடீர் உத்தரவு
உக்ரைன் ட்ரோன்கள் ரஷ்யாவின் உட்பகுதிகள் வரை ஊடுருவி வரும் நிலையில், தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்னும் அச்சம் புடினுக்கு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே, பலத்த பாதுகாப்பும் பங்கர் வசதியும்கொண்ட வால்டே என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது பங்களாவில் புடின் தங்கியுள்ளார்.

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு இந்த ஒரு மாளிகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், புடின் தன் மகள்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளாராம். அதாவது, உடனடியாக தன் மூத்த மகள்கள் இருவரும் தத்தம் பிள்ளைகளுடன் வால்டே நகரில் அமைந்துள்ள தனது மாளிகையில் வந்து வசிக்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளாராம்.

அதைத் தொடர்ந்து, புடினுடைய மூத்த மகளான மரியாவும் அவரது இரண்டு பிள்ளைகளும், அடுத்த மகளான கேத்தரினாவும் அவரது மகனும் புடினுடைய மாளிகைக்கு வந்துவிட்டார்களாம்.
அதேபோல, புடினுடைய ரகசிய காதலி என அழைக்கப்படும் அலினா கபேவாவும் தனது இரண்டு மகன்களுடன் புடினுடன் தங்கியிருக்கிறார்களாம்.

ஈரான் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு கமெராக்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஹாக் செய்தனவாம்.
அதேபோல, தனது நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க எதிரிகள் கமெராக்களை ஹாக் செய்துவிடக்கூடும் என அஞ்சும் புடின், கமெராக்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய அவசர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |