மும்பை இந்தியன்ஸை சம்பவம் செய்த ஆர்ச்சர், பர்கர்: கெத்தாக ப்ளேஆப்பில் நுழைந்த ராஜஸ்தான்
மும்பை இந்தியன்ஸை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 205 ஓட்டங்கள்
ப்ளேஆப் சுற்றில் நுழையப் போகும் 4வது அணியை தீர்மானிக்கும் முக்கியப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.
துருவ் ஜுரேல் 38 (26) ஓட்டங்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 (15) ஓட்டங்களும், தசுன் ஷானகா 29 (15) ஓட்டங்களும் விளாசினர். ஷார்துல் தாக்கூர், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜேக்ஸ், கசன்பர் மற்றும் போஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா டக்அவுட் ஆக, நமன் திர் 6 ஓட்டங்களிலும், ரியான் ரிக்கெல்டன் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
சூர்யகுமார் விளாசல்
அடுத்து வந்த திலக் வர்மாவை 3 ஓட்டங்களில் ப்ரிஜேஷ் ஷர்மா வெளியேற்ற, சூர்யகுமார் மற்றும் வில் ஜேக்ஸ் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
யாஷ் ராஜ் புஞ்சா இந்த கூட்டணியை உடைக்க ஜேக்ஸ் 33 (18) ஓட்டங்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார்.
இந்தக் கூட்டணி அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல, ஹர்திக் பாண்டியாவை 34 (15) ஓட்டங்களில் ஆர்ச்சர் வெளியேற்றினார்.

அதன் பின்னர் போஷ் ஆட்டமிழக்க, பர்கர் ஓவரில் 60 ஓட்டங்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்களே எடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், பர்கர், புஞ்சா மற்றும் ப்ரிஜேஷ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |